ரீல்ஸ் பிரபலம் ‘கூமாபட்டி’ தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார் ரீல்ஸ் பிரபலம் ‘கூமாபட்டி’ தங்கபாண்டி.

பேருந்தில் வரும்போது கதவு இடித்து கை முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், இது பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்தது எனவும் கூறி அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. அக் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் தனது இன்ஸ்டா ஐடியில் ‘கூமாபட்டி ஊருக்கு வாருங்கள்’ என அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் அனைத்தும் வைரலானதைத் தொடர்ந்து பல மக்கள் கூமாபட்டிக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

‘மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாபட்டிக்கு வாங்க… கூமாபட்டி ஒரு தனி தீவு… இந்த ஊரின் தண்ணீர் ஒரு மூலிகை தண்ணீர்… என அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

இதன்மூலம் பிரபலமான தங்கபாண்டியன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். மேலும் ஒரு இன்ஃப்லூயன்சராக அவதாரம் எடுத்தார்.

இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்தபோது கதவு இடித்து அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்தது எனக் கூறி அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Comments are closed.