ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடப்பதுபோல, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்த 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செப்.21ஆம் தேதி தனியார் பண்ணை வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந் நிர்வாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நபர் ஒன்றுக்கு ரூ.40,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு காதல் ஜோடிகள், தம்பதியினர் ரூ.1 லட்சம் கூட கொடுக்க முன்வந்தனர். மும்பை மற்றும் பெங்களுருவைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் கூட இந் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்துள்ளனர்.
இது இளைஞர்களுக்கான ஓர் உயர்மட்ட கூட்டம் என்றும், இதில் நிர்வாணமாக கலந்து கொள்ளலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், நிகழ்ச்சி நடக்கும் இடங்களைக் கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தனர். செல்ஃபோன்களுக்கும் தடை விதித்திருந்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போஸ்டர் வெளியிட்டு இருந்தனர். இது சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந் நிகழ்ச்சி தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.