அண்ணா பிறந்த நாள்: உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழே வைக்கப்டடிருந்த உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வரைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் ப்ரியா ராஜன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

“தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டோம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

Comments are closed.