தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் நான்கு மூலைகளிலும் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம் மாநாடுகளில் பிரதமர் மோடியை பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடியை பங்கேற்க செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.