பஞ்சமி நிலங்களை மீட்டு அவற்றை நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநாட்டில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
பின்னர், அம் மாநாட்டில் பேசிய சண்முகம், பஞ்சமி நில் என தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே பஞ்சமி நிலத்தை நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைப்போம் என பெ.சண்முகம் தெரிவித்தார்.

Comments are closed.