டீ, காபி விலை நாளை முதல் உயர்வு!

சென்னையில் நாளை (செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, டீ விலை ரூ.12-லிருந்து ரூ.15 ஆகவும், காபி விலை ரூ.15-லிருந்து ரூ.20ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

பால் விலை, டீ தூள் மற்றும் காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் புதிய விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி,

டீ, பால், லெமன் டீ விலை ரூ.15

காபி – ரூ.20

ஸ்பெஷல் டீ – ரூ.20

ராகி மால்ட் – ரூ.20

சுக்கு காபி – ரூ.20

பூஸ்ட் – ரூ.20

ஹார்லிக்ஸ் – ரூ.20

பார்சல்
————
கப் டீ – ரூ.45

கப் பால் – ரூ.45

கப் காபி -ரூ.60

ஸ்பெஷல் டீ (கப்) – ரூ.60

ராகி மால்ட் (கப்) – ரூ.60

சுக்கு காபி (கப்) – ரூ.60

பூஸ்ட் (கப்) – ரூ.70

ஹார்லிக்ஸ் (கப்) – ரூ.70

போண்டா, பஜ்ஜி, சமோசா ஆகியவை (ஒன்று) – ரூ.15

 

Comments are closed.