ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்: உற்சாக வரவேற்பு அளித்த தமிழர்கள்!

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்துக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

‘ஸ்டாலின் அப்பாவை ஜெர்மனிக்கு வரவேற்கிறோம்’ என்ற பதாகையுடன் சிறுமி ஒருவர்;, பூங்கொத்துடன் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார்.


அவர்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
‘இங்குள்ள எனது தமிழ்க் குடும்பத்தின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தேன். இங்கிருந்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இப் பயணத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.