முதலீடுகளை ஈர்க்கவா? முதலீடுகள் செய்யவா? : ஈபிஎஸ் கேள்வி

முதல்வர் இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுய்ய வெளிநாட்டுப் பயணம் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற பொதுமக்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிப்பாரா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் பேர்வழி என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டுவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், இன்று 5ஆம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டள்ளது உண்மையிலேயே ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தெலுங்கானா (அமெரிக்கா – ரூ.31,500 கோடி) மற்றும் கர்நாடகா (அமெரிக்கா ரூ.25,000 கோடி) முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஸ்டாலின் மார்ச் 2022ல் துபாய்க்கு குடும்ப சுற்றுலா (6 நாட்கள்), மே மாதம் 2023ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் (6 நாட்கள்), ஜனவரி மாதம் 2024ல் ஸ்பெயின் சுற்றுப்பயணம் (10 நாட்கள்), ஆகஸ்ட் 2024ல் அமெரிக்கா சுற்றுப்பயணம் (16 நாட்கள்) என மொத்தம 4 முறை 40 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் சுமார் ரூ.18,000 கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதிலும் பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே.
ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் உண்மையில் தமிழகத்திற்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை என தொழில்துறையினர் கூறுகின்றனர்.

அதேபோல, கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும் டூ.60,674 கோடி முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எனவே ஆரம்பம் முதல் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கை குறித்து மூச்சு விடவில்லை என எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.