கச்சத்தீவு விவகாரம்: விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக மத்திய அரசு கச்சத்தீவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என மதுரையில் ஆக.21ஆம் தேதி நடைபெற்ற தவெக 2வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அதை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

 தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பதற்காக ஒவ்வொரு விஷயங்களையும் கூறுவர். அப்படித்தான் கச்சத்தீவு குறித்து கூறியுள்ளனர்.

கச்சத்தீவு குறித்து அவர்கள் கூறுவது இது முதல்முறை அல்ல. இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை.
கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்தேன். அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.