தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை ‘அங்கிள்’ எனக் குறிப்பிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெண்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என பல தரப்பினரையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டினார். ‘திஸ் இஸ் வெரி வெரி ஒர்ஸ்ட், அங்கிள்’ என்றார் விஜய்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்ற தவெகவின் 2-வது மாநில மாநட்டில் கலந்து கொண்டு, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில், பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “பாசிச பாஜகவுடன் ஒரு கட்சி (அதிமுக) நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி (திமுக) மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது” என்றார்.
மறைமுக கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா எனவும் விஜய் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் நியாயம் இருக்கிறதா? மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்கள் என்றார் விஜய்.
“டாஸ்மாக்கில் மட்டுமே ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா, அங்கிள்? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறுவது உங்களுக்கு கேட்கிறதா? இதில், உங்களை ‘அப்பா’ என்று சொல்வதாக கூறுகிறீர்களே? வாட் இஸ் திஸ், அங்கிள்? திஸ் இஸ் வெரி வெரி ராங், அங்கிள். வெரி வெரி ராங்” எனக் கூறினார்.
பெண்களுக்கு மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கு, விவாசயிகளுக்கு, மீனவர்களுக்கு என பலரையும் ஏமாற்றுகிறீர்கள். இது வெரி வெரி ஒர்ஸ்ட், அங்கிள் என்றார் விஜய்.
‘நமக்கு ஒரே கொள்கை எதிரி பாஜக, ஒரே அரசியல் எதிரி திமுகதான்’ என்றார் விஜய்.
கூட்டணி வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சி நமது தவெக அல்ல. மாபெரும் இளைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும் என்றார் விஜய்.

Comments are closed.