விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர்!

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.17) தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, இ-சேவை மையத்தைப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் நலம்பள்ளி வட்டம் தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூர் அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இவ்விழாவில், ரூ.512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.362.77 கோடி செலவில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.830.06 கோடியில் 70,427 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

Comments are closed.