அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பணமோசடி வழக்கு தொடர்பாக, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கலில் உள்ள வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் அமலாகத்துறை அதிகாரிகள் இன்று (ஆக.16) காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, திண்டுக்கலில் துரைராஜ் நகரில் உள்ள அவரது வீடு, சீலப்பாடியில் உள்ள திமுக எம்எல்ஏவும், அமைச்சர் பெரியசாமியின் மகனுமான ஐ.பி.செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகின்றன.

Comments are closed.