நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் அமைச்சர் கீதா ஜீவன் சில தினங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரையில்;, இந்திய அளவில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், அவர்களது பாதுகாப்பு தமிழகத்தில் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிட்டு இருந்தார்.

அக் கட்டுரையை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதும், அதிகம் பேர் வேலைவாய்ப்புடன் இருப்பதும் தமிழகம் தான். நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது என்பதை அவர் (அமைச்சர் கீதா ஜீவன்) அந்த கட்டுரையில் எடுத்துக்காட்டி உள்ளார்.

குற்றங்கள் மீது விரைவான, கடுமையான, பாரபட்சமற்ற நடவடிக்கை, குற்ற விகிதங்கள் குறைவது போன்றவை பெண்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.

விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் மூலம் மகளிருக்கு அதிகாரமளிப்பதை கட்டுரையின் மூலம் சுதந்திர தினத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

Comments are closed.