சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2025ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கினார்.
தமிழ் நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான விருது கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இதுவரை சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, கி.வீரமணி, முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.