சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை (ஆகஸ்ட் 14) வெளியாக உள்ள கூலி திரைப்படம் வெற்றிபெற அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கூலி படம் வெற்றிபெற அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில்,
“திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், இப் பொன்விழா ஆண்டில் அவரது நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.