கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்: சிபிஎம் செயலாளர் சண்முகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகததில் இறந்த முன்னாள் நிர்வாகிகள் 16 பேரின் புகைப்படங்களை மாநிலச் செயலாளர் சண்முகம் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 97.38 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஓராண்டில் இறந்துபோனவர்கள் 26 லட்சம் பேர் என்பது நம்பும்படியாக இல்லை.

தேர்தல் ஆணையம் வாக்குரிமையை அனைவருக்கும் வழங்க முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், வாக்காளர்களை நீக்குவதில்தான் தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டி உள்ளது.
தீவிர திருத்தப் பணி நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்த வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார் சண்முகம்.

Comments are closed.