அறிவுச்சூரியன் அம்பேத்கர்

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச் சூரியன்தான் அம்பேத்கர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரை துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் வெற்றி.

அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் போராளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!” எனக் கூறியுள்ளார்.

Comments are closed.