திமுக எம்.பி.யை கண்டித்த நீதிபதி!

தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக இருபதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்தை நீதிபதி கண்டித்தார்.

வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

அப்போது, அவர் இருபதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்ததால், நீதிபதி சக்திகுமார் அதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

‘நீதிமன்றத்துக்கு இதுபோன்று கும்பல் சேர்த்துக் கொண்டு வரக்கூhது’ என எம்.பி.கதிர் ஆனந்தை நீதிபதி சக்திகுமார் கண்டித்தார்.

பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி சக்திகுமார், இவ்வழக்கில் கதிர் ஆனந்த் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Comments are closed.