108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அப் புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சம்பத் தலைமையில் போலீஸார் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சிலைகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, கோவிலில் பணிபுரியும் பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், மணியக்காரர், கோவிலின் நிர்வாக அறங்காவலர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி மாயமாகிவிட்டதான குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.