எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும்தான் போட்டி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:
“அரசியல் காழ்ப்புடன் நேர்மை திறனற்று நம்மைப் பற்றி குற்றஞ்சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு ஒரு சில கேள்விகள், திமுக அரசின் கபட நாடகத்தை தாங்கிப் பிடிக்க இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் திக்கித்திணறி நின்றது மறந்துவிட்டதா?
கரூர் சம்பவத்துக்குப் பிறகு அவசர அவசரமாக தனிநபர் ஆணையம், தனி நபர் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு, இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பதை மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா?
மீண்டும் சொல்கிறேன் 2026ல் திமுக மற்றும் தவெக இடையே மட்டும்தான் போட்டி. இப்போட்டி, இன்னமும் வலுவாக மாறப்போகிறது. 100மூ வெற்றி நமக்கே” என்றார்.

Comments are closed.