சென்னை மாநாகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்று நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று, இன்று மாலை அல்லது இரவு ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்துக்கு நள்ளிரவில் சென்ற உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மேலும், மழை தொடர்பாக உதவி எண் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

Comments are closed.