கொழுந்தனின் மர்ம உறுப்பை அறுத்த அண்ணி!

தனது தங்கையிடம் நன்றாக பழகி, பின்னர் கழற்றி விட்டு, வேறொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால் ஆத்திரம் அடைந்த பெண் தனது கொழுந்தனின் மர்ம உறுப்பை பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் அசாரே. இவரது மகன் உதய். இவர் மஞ்சு என்பவரை திருமணம் செய்துள்ளார்.
உதய்யின் தம்பி உமேஷ் (20). இவர் மஞ்சுவின் தங்கையிடம் பழகியுள்ளார். இப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக அசாரே குடும்பத்தினர், அசாரேவுக்கு திருமணம் முடித்த அதே வீட்டில் உமேஷ{க்கும் திருமணம் முடிக்க விருப்பம் இல்லை என்பதால் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், உமேஷ் மஞ்சுவின் தங்கையை கழற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியுள்ளார். இதனால், மஞ்சுவின் தங்கை வீட்டில் வேறு யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார் . அதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.

தனது தங்கையின் இந் நிலைக்கு காரணம் தனது கொழுந்தன் தான். அவரை பழி வாங்க வேண்டும் என மஞ்சுவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

அண்மையில் ஒருநாள் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது கொழுந்தன் உமேஷ் படுத்திருந்த அறைக்கு சென்ற மஞ்சு, சமையலறையில் உள்ள கத்தியால் கொழுந்தனை கடுமையாத் தாக்கினார். அப்போதும் கோபம் தணியாத மஞ்சு, கொழுந்தன் உமேஷின் மர்ம உறுப்பை கடுமையாகத் தாக்கி, அறுத்துள்ளார். உமேஷ் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மற்ற அனைவரும் வருவதற்குள் மஞ்சு அங்கிருந்து வெளியேறி தப்பிவிட்டார்.

படுகாயமடைந்த உமேஷை குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து உமேஷை காப்பாற்றினர். ஆனால் காயங்கள் முழுமையாக குணமடைய 6-7 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே. உமேஷை அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் தாக்கியதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோதுதான், உமேஷை தாக்கி அவரது மர்ம உறுப்பை அறுத்தது அவரது அண்ணி மஞ்சு என்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள மஞ்சுவை தேடி வருகின்றனர்.

Comments are closed.