திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அதிரச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
அலிப்பிரி விநாயகர் கோவில் அருகேயுள்ள கனுமா சாலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. நடைபாதையில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் சிறுத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு பக்தர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே செல்ல வேண்டாம். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். கூட்டம் கூட்டமாக நடைபாதையில் செல்ல வேண்டும் என பக்தர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.