தவறு செய்தவர்கள் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் தான் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

தவறு செய்தவர்கள் அடைக்கலம் ஆகி தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் தான் பாஜக என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ.738 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

 தண்ணியில்லாத காடு என கூறப்பட்ட ராமநாதபுரத்தின் நிலையை திமுக அரசு தான் மாற்றி காட்டியுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

தமிழகம், தமிழர்கள் என்றாலே ஏன் மத்திய அரசுக்கு கசக்கறது? தமிழகம் மீது அவர்களுக்கு இருக்கும் வன்மத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள் என்பதை நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜிஎஸ்டியால் நிதி உரிமை போய்விட்டது. நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சனை. சிறப்பு திட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்கள். தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதையே மத்திய பாஜ அரசு வழக்கமாக செய்து கொண்டு இருக்கிறது.


மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணை குழு அனுப்பாத பாஜ, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள். அதற்கு, தமிழகத்தின் மீது உள்ள அக்கறை காரணம் அல்ல. இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. இங்கே ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதனை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாம எனப் பார்க்கிறார்கள்.

தவறு செய்தவர்கள் அடைக்கலம் ஆகி தப்பிப்பதற்கான வாஷிங் மெஷின்தான் பாஜக. அந்த வாஷிங் மெஷினில் உத்தமர் ஆகிவிடலாம் என குதித்து இருக்கிறார் பழனிசாமி. அவருக்கு கூட்டணிக்கு யாராவது வருவார்களா என ஆள் சேர்க்கும் அசைன்மென்;ட் கொடுத்து இருக்கிறார்கள்.

Comments are closed.