நடிகை ஹேமமாலினி தலைமையில் தமிழகம் வந்தடைந்த எம்.பி.க்கள் குழு!

கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) சார்பில் பிரபல நடிகை ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்பேரில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், இச்சம்பவத்தை விசாரிக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி ஒருங்கிணைப்பாளராக உள்ள இக்குழுவில் எம்.பி.க்கள் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ்குமார் (தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனுராக் தாகூர் எம்.பி., இன்று மாலை வரை கரூரில் அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளதாகவும், இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.