சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று (செப்.27) காலை அவருக்கு காய்ச்சல் அதிகமானது.  இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலை சரியான பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.