மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!

தனது மகளையே பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதின்றம் இன்று (செப்.22) அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி (48) என்பவர் 16 வயதேயான தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக, தஞ்சாவூர் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி நித்யா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட அம்மாபேட்டை புத்தூர் தெருவைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (48) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலையை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியதுடன், இவ்வழக்கின் புலன்விசாரணையை முடித்து எதிரியின் மீது 20.06.2021 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

Comments are closed.