சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே, மோப்பநாய் உதவியுடன் போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நீதிமன்றத்திற்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சுங்க தலைமை அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.

Comments are closed.