திமுக முன்னாள் எம்.பி.வீட்டில் 300 சவரன் கொள்ளை!

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி மற்றும் திமுகவின் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயனின் பூட்டியிருந்த தஞ்சை வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் 300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

இக் கொள்ளைச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயனின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அப் பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் துணையோடு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.