கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு!

சுற்றுலா சென்று கொண்டிருந்த கார் விழுப்புரம் அருகே இன்று காலை விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த 3 நபர்கள் உடல் கருகி பரிதாமாக இறந்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான காரில் சென்னையைச் சேர்ந்த 5 நண்பர்கள் மூணாறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதில் காரில் பயணித்த சம்சுதீன், கொளத்தூரைச் சேர்ந்த ரிஷி, ஆவடியைச் சேர்ந்த மோகன் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.