கடந்த 2019-2023க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் UAPA எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 10,440 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில், 335 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இச் சட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதே காலகட்டத்தில், நாட்டிலேயே இரண்டாவதாக உத்தரப்பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன.
அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடைபெறும் பிற மாநிலங்களில் அசாம், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
UAPA சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் பெறுவது கடினமானதாகும். அரசாங்கத்தை விமரிசிப்பவர் மீது அதிகரித்து வரும் UAPA சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளில்
10,440 பேர் கைது வழக்குகள் குறித்து சமூக ஆர்வலர்களும், ஜனநாயக சக்திகளும் கவலை தெரிவித்துவரும் இச்சூழலில் இத் தரவு வந்துள்ளது.

Comments are closed.